கோலாலம்பூர், ஜூன் 15 – மலேசியாவின் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் மற்றும் ஒன்பது மாநிலங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெர்லிஸ் மாநிலம் முழுவதையும் தவிர, கெடா மாநிலத்தின் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார் மற்றும் போக்கோக் செனா ஆகிய பகுதிகளிலும் இந்த மோசமான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திரங்கானு மாநிலத்தின் பெசுட், செதியூ, கோலா நெருஸ், உலு திரங்கானு, கோலா திரங்கானு, மாராங் மற்றும் டுங்குன் ஆகிய இடங்களிலும், பகாங் மாநிலத்தின் ரவுப், பெந்தோங், தெமர்லோ, பேரா மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்ற இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய இடங்களுக்கும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெலுபு, கோலா பிலா, ஜெம்போல் மற்றும் தம்பின் ஆகிய பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநிலத்தில் செகாமட், பத்து பகாட், குளுவாங், மெர்சிங், பொந்தியான் மற்றும் கூலாய் ஆகிய மாவட்டங்கள் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக் மாநிலத்தின் ஸ்ரீ அமான், பெத்தோங், சரிகேய், சிபு, முக்கா, பிந்துலு, மிரி மற்றும் லிம்பாங் ஆகிய இடங்கள் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் சபா மாநிலத்தில் கனிங்காவ், தம்புனான் உள்ளிட்ட உட்பகுதி மாவட்டங்கள், மேற்கு கடற்கரைப் பகுதி, தவாவு, குனாக், லாஹாட் டத்து மற்றும் சண்டக்கான் ஆகிய இடங்களுக்கும் இந்த இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





