மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

14 ஜூன் 2026, 10:15 AM
மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 14 — நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரில் இன்று இரவு 9.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரித்துள்ளது.

இன்று மாலை 4.35 மணியளவில் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை அறிவிப்பின்படி, பெர்லிஸ், பினாங்கு, பேராக் ஆகிய மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கோலாலம்பூரிலும் இந்த மோசமான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் இந்த வானிலையால் பாதிக்கப்படலாம்.

கெடாவில் குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோக் செனா, பாடாங் தெரப், யான், பெண்டாங், கோலா மூடா, சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய பகுதிகளுக்கும், கிளந்தானில் குவா மூசாங் பகுதிக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகாங் மாநிலத்தில் கேமரன் மலை, லிப்பிஸ், ரவூப், ஜெராண்டுட், பெந்தோங், தெமர்லோ, பெரா மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளிலும் இந்த மோசமான வானிலை நிலவும். நெகிரி செம்பிலானில் ஜெலுபு, ஜெம்போல் மற்றும் தம்பின் ஆகிய மாவட்டங்களும், மலாக்காவில் ஜாசின் பகுதியும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் மாநிலத்தில் தங்கா, செகாமட், மூவார், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் பிந்துலுவின் செபாவ் பகுதி, மிரியின் பெலுரு, தெலாங் ஊசான், மிரி நகரம் மற்றும் மாருடி ஆகிய இடங்களுடன் லிம்பாங் பிரிவு முழுமையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சபா மாநிலத்தில் பெடாலான் மற்றும் மேற்கு கடற்கரை பிரிவுகள் முழுமையிலும், சண்டாக்கானின் தொங்கோட், தெலுபிட் ஆகிய இடங்களிலும், கூடாட்டின் கோத்தா மருது பகுதியிலும் இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.