ஜொகூர் மாநிலத் தேர்தல் : பக்காத்தான் ஹரப்பான் நாளை வேட்பாளர்களை அறிவிக்கிறது

21 ஜூன் 2026, 6:36 AM
ஜொகூர் மாநிலத் தேர்தல் : பக்காத்தான் ஹரப்பான்  நாளை வேட்பாளர்களை அறிவிக்கிறது

ஜொகூர் பாரு, ஜூன் 21: 16-வது ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர்களின் விபரங்கள் நாளை வெளியிடப்படும்.

தங்காக்,புக்கிட் கம்பிரில் நடைபெறும் அந்த வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கலந்து கொள்ளவிருக்கிறார்.

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி தலைவர்களுடன் இணைந்து வேட்பாளர் அறிவிப்பு செய்யப்படவிருப்பதை அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

மாநில வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்காகவும் நேர்மையாக, திறமையாக, கடினமாக உழைக்கக்கூடிய தலைமைத்துவத்தைப் பெற ஜோகூர் தகுதி பெற்றுள்ளது என பக்காத்தான் ஹரப்பான் தலைவருமான அவர் கூறினார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் பக்காத்தான் ஹரப்பானின் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி நாளை இரவு 8 மணிக்கு தாங்காக், புக்கிட் கம்பிர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஜோகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.