கோலாலம்பூர், ஜூன் 20 - திங்கட்கிழமை தொடங்கும் மக்களவைக் கூட்டத்தில், பிரதமரின் தவணைக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் பரிந்துரையை மீண்டும் முன்வைப்பது உட்பட நான்கு முக்கிய சட்ட மசோதாக்கள் முக்கிய இடம் வகிக்கவிருக்கின்றன.
ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெறும் அந்த மக்களவைக் கூட்டத்தில் தேசிய சட்டத் துறை தலைவர் (Attorney General) மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகிய இரு தரப்புகளின் பொறுப்பினைப் பிரிக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
2026 இணையக்குற்ற மசோதாவைத் தாக்கல் செய்வது, 1987 போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்வது போன்ற முக்கிய அம்சங்களும் விவாதிக்கப்படவுள்ளன.
பிரதமரின் தவணைக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மாசோதா ஏற்கனவே கடந்த மார்ச்சில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அவையின் மூன்றில் இரு பெரும்பாண்மையை அந்த மசோதா பெறத் தவறியது.







