கோம்பாக், ஜூன் 18 - முதல் முறையாக, 2025 எஸ்டிபிஎம்( STPM ) தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற 18 மாணவர்கள் பொது பல்கலைக்கழகங்களில் இளங்களைப் பட்டப் படிப்பைத் தொடர உபகாரச் சம்பளத்தைப் பெறுவர்.
மலேசிய தேர்வு மன்றத்தில் உறுப்பினராக இருக்கும் துணைவேந்தர்களைக் கொண்டிருக்கும் பொது பல்கலைகழகங்களில், கல்வி கட்டணம் வாயிலாக இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படும்.
ஆறாம் படிவ மாணவர்களின் சிறப்புத் தேர்ச்சியினைப் பாராட்டும் அதே வேளை, பல்கலைகழகத்துக்கு முந்திய கல்வி வாய்ப்பினை தொடர்ந்து வலுப்படுத்தும் அரசாங்கத்தின் கடப்பாட்டினை இந்த முயற்சி காட்டுவதாக, கல்வியமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.







