புத்ராஜெயா, 3 மார்ச்- படிவம் ஆறு மாணவர்கள் இனி இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய கல்விப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுகிறார்கள் என்றும், இது பல்கலைக்கழக வாழ்க்கையில் நுழைவதற்கான அவர்களின் தயாரிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"அனைத்து படிவம் ஆறு கல்வியும் 'இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய' வகைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன். படிவம் ஆறு மாணவனாக இருந்தால், ஒரு பள்ளி மாணவனைப் போலக் கருதப்படுவதை நான் விரும்ப மாட்டேன். எனவே, நாங்கள் ஒரு கொள்கை மாற்றத்தைச் செய்துள்ளோம். இனி, அனைத்து இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய கல்வியும் உயர் கல்வி அமைச்சின் கீழ் இருக்கும்," என்று அவர் கூறினார்.
கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுடன் ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நடைபெற்ற பிரதமரின் இப்தார் விருந்து நிகழ்ச்சியின்போது, மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடனான ஒரு சாதாரண கலந்துரையாடல் அமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மெட்ரிகுலேஷன் மற்றும் பிற பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வித் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, படிவம் ஆறு கல்வித் திட்டம் 'புறக்கணிக்கப்பட்டதாக' கருதப்பட்டதால், இந்த வகைப்படுத்தல் மாற்றம் செயல்படுத்தப்பட்டதாக அன்வார் கூறினார்.
கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, தேசிய கல்வித் திட்டம் 2026-2035 வெளியீட்டு விழாவில் பேசிய அன்வார், இந்த ஆண்டு முதல் படிவம் ஆறு மற்றும் மெட்ரிகுலேஷன் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி முறையை உயர் கல்வி அமைச்சு முழுமையாகப் பொறுப்பேற்கும் என்றும், இதன் மூலம் இவ்விரு குழுக்களும் அதிகாரப்பூர்வமாக உயர் கல்வி மாணவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்.
படிவம் ஆறு: இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய கல்வி, பல்கலைக்கழக நுழைவுக்கான தயாரிப்பு - பிரதமர் அன்வார்
2 மார்ச் 2026, 2:15 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
திங்கட்கிழமை மக்களவை கூட்டம் தொடக்கம்; 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்
Latchumy Ramamoorthy
20 ஜூன் 2026

national
சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற 18 STPM மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
2025 எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள்: CGPA 4.00 பெற்று 1,336 மாணவர்கள் சாதனை
Shalini Rajamogun
18 ஜூன் 2026

selangor
2025 எஸ்டிபிஎம் (STPM) தேர்வு முடிவுகள் ஜூன் 18 வெளியிடப்படும்
Evelyn Moses
16 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



