கோலா லங்காட்டில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமய அமைப்புகளுக்கு லீமாஸ் நிதியுதவி

12 ஜூன் 2026, 1:09 AM
கோலா லங்காட்டில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமய அமைப்புகளுக்கு லீமாஸ் நிதியுதவி

ஷா ஆலம், ஜூன் 12: சிலாங்கூர் மாநிலத்தில் சமய மற்றும் சமூக நல நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், கோலா லங்காட் மாவட்டத்தில் உள்ள ஐந்து வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமய அமைப்புகளுக்கு சிலாங்கூர் மாநில பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமயங்களின் சிறப்புக் குழுவான ‘லீமாஸ்’ (LIMAS) நிதியுதவிகளை வழங்கியுள்ளது.

மாநிலத்தில் உள்ள பல்லின மற்றும் பல சமய சமூகங்களின் தேவைகளுக்கு ஆதரவளிப்பதில் சிலாங்கூர் மாநில அரசு கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்று லீமாஸ் குழுவின் இணைத் தலைவர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்களும் சமய அமைப்புகளும் வெறும் வழிபாட்டு மையங்களாக மட்டும் திகழாமல், மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக விளங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாநில அரசு எப்போதும் உள்ளடக்கிய கொள்கையையும் சமூக ஒற்றுமையையும் தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு சமூகமும் அமைதியான, இணக்கமான மற்றும் ஒருவரையொருவர் மதிக்கும் சூழலில் வாழ முடியும் என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதியுதவியானது, பந்திங் சூன் தியான் கோங் சமய சங்கம், தெலுக் புனுட் பந்திங் டத்தோ கொங் சமய சங்கம், மற்றும் பெர்மாதாங் பாசிர் சீன மயான சங்கம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பந்திங் பிங் ஆன் தோங் சமய சங்கம் மற்றும் ஜெஞ்சாரோம் ஷாங் தியான் கோங் சமய சங்கம் ஆகிய அமைப்புகளும் இந்த நிதியுதவியைப் பெற்றுப் பயனடைந்துள்ளன.

சிலாங்கூர் மாநில அரசிற்கும் முஸ்லிம் அல்லாத சமூகத்திற்கும் இடையே லீமாஸ் குழு தொடர்ந்து ஒரு பாலமாகச் செயல்படும் என்றும், சமய நிறுவனங்களின் நலன் மற்றும் மேம்பாடு தொடர்ந்து தகுந்த கவனத்தைப் பெறுவதை இக்குழு உறுதி செய்யும் என்றும் பாப்பாராய்டு மேலும் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.