சிலாங்கூர் மாநில தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நவம்பர் 6-இல் நடைபெறும்

10 அக்டோபர் 2026, 10:03 AM
சிலாங்கூர் மாநில தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நவம்பர் 6-இல் நடைபெறும்

ஷா ஆலாம், அக். 10 – சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டிலான மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி டத்தாரான் கிள்ளான் அல்லது பாடாங் செட்டி திடலில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது, மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்து ஆலயங்களுக்குச் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.

இந்து சமூகத்தின் நலனுக்காகவும் அதன் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதற்காகவும் ஆலயங்கள் ஆற்றிவரும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் பதிவு செய்யப்படாத ஆலயங்கள் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த அங்கீகாரத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த அணுகுமுறையின் மூலம் ஆலய நிர்வாகக் குழுக்கள் உரிய அங்கீகாரத்தைப் பெறுவதுடன், தங்களது ஆலயங்களின் பதிவு தொடர்பான பிரச்சனைகளையும் தீர்த்துக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.