வழிபாட்டுத் தலங்கள் தவறான நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதை சிலாங்கூர் அனுமதிக்காது

26 அக்டோபர் 2026, 6:41 AM
வழிபாட்டுத் தலங்கள் தவறான நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதை சிலாங்கூர் அனுமதிக்காது

ஷா ஆலாம், அக் 26 : சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள எந்தவொரு வழிபாட்டுத் தலமும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை மாநில அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என மனிதவள, வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19 வரை சிலாங்கூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கிள்ளானில் பதிவு செய்யப்படாத வழிபாட்டுத் தலம் ஒன்றில் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை தாம் கடுமையாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

வழிபாட்டுத் தலங்கள் மதிக்கப்பட வேண்டியவை, அதன் புனிதம் பேணப்பட வேண்டும் ; அவற்றை தடைசெய்யப்பட்டப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கோ குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதற்கோ அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, குற்றவாளிகளின் தனிப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் சார்ந்திருக்கும் மதம் அல்லது சமூகத்தை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் . சில தனிநபர்களின் செயல்களுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்தவோ அல்லது குற்றம் சுமத்தவோ கூடாது என்றும், பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச விவகாரங்களுக்கான சிறப்புக் குழுவின் இணைத் தலைவருமான பாப்பராய்டு கூறினார்.

இவ்விவகாரத்திற்கு மதம் அல்லது இனத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. மாறாக இது சட்ட ஒழுங்கு, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தை மதித்து நடப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவும்.

ஆகவே, இச்சம்பவத்தில் காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்குத் தனது ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.