பிலிப்பைன்ஸில் இரு மிதமான நிலநடுக்கங்கள்; மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

9 ஜூன் 2026, 1:00 AM
பிலிப்பைன்ஸில் இரு மிதமான நிலநடுக்கங்கள்; மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

கோலாலம்பூர், ஜூன் 9 – நேற்று பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பிராந்தியத்தில் அடுத்த இரண்டு மணி நேர இடைவெளியில் இரண்டு மிதமான நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. எனினும், இதனால் மலேசியாவிற்கு எந்தவொரு சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இன்று மாலை 5.17 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியிருந்தது. இதன் மையப்புள்ளி இந்தோனேசியாவின் தலாட் (Talaud) தீவுகளுக்கு வடமேற்கே 171 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்று இரவு 7.22 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவான மற்றொரு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பூமிக்கு அடியில் 48 கிலோமீட்டர் ஆழத்தில், பிலிப்பைன்ஸின் கொரோனடால் (Koronadal) நகரத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 112 கிலோமீட்டர் தொலைவில் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 7.37 மணியளவில் மிண்டனாவோ தீவில் பதிவான 7.9 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கப் பேரிடரைத் தொடர்ந்து, இந்த தொடர் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 134 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தற்போதைய அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.