ஷா ஆலம் ஜூன் 2 : இன்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia), சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் இன்று நண்பகல் வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதே வானிலை எச்சரிக்கை பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
பகாங் மாநிலத்தில் உள்ள கேமரன் மலை, லிப்பிஸ், ரவுப் மற்றும் பெந்தோங் ஆகிய சில பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஜெலுபு, சிரம்பான், போர்ட் டிக்சன், கோலா பிலா மற்றும் ரெம்பாவ் ஆகிய பகுதிகளிலும் இதே வானிலை நிலவும் என அம்மையம் தனது முகநூல் (Facebook) பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடிய இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படும் போது இந்த எச்சரிக்கை விடுக்கப் படுவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
"இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை என்பது குறுகிய கால எச்சரிக்கையாகும். இது ஒவ்வொரு முறை விடுக்கப்படும் போதும் அதிகபட்சமாக ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான வானிலையின் காரணமாக, திடீர் வெள்ளம் மற்றும் மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர், சிலாங்கூரில் பலத்த மழைக்கான எச்சரிக்கை
2 ஜூன் 2026, 5:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
3 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை
Bernama
28 ஆகஸ்ட் 2026

national
சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா
Bernama
16 ஆகஸ்ட் 2026

national
குறைவான மழையால் புகை மூட்டம் 2-5 தினங்களுக்கு நீடிக்கும் : வானிலை ஆய்வுத் துறை
Bernama
13 ஆகஸ்ட் 2026

national
சிலாங்கூரின் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



