குழந்தைகள் காப்பக சிறுவனை மிளகாய் நீர் குடிக்க கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டு: போலீசார் விசாரணை

29 மே 2026, 8:26 AM
குழந்தைகள் காப்பக சிறுவனை மிளகாய் நீர் குடிக்க கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டு: போலீசார் விசாரணை

ஷா ஆலம், மே 29: கடந்த வாரம் குளுவாங் மாவட்டத்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சிறுவன் ஒருவனை மிளகாய் நீர் குடிக்கக் கட்டாயப் படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் புகார் பெறப் பட்டுள்ளதை போலீசார் உறுதிப் படுத்தியுள்ளனர்.

நேற்று இரவு 8.46 மணியளவில் அச்சிறுவனின் பாதுகாவலரிடமிருந்து புகார் பெறப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் பஹ்ரின் முஹம்மது நோ தெரிவித்தார் என பெரீத்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

"இச்சம்பவம் கடந்த மே 20-ஆம் தேதி நடந்ததாக நம்பப்படுகிறது. குழந்தைகள் காப்பகத்தின் சமையலறையில் ஆசிரியை ஒருவர் அச்சிறுவனை மிளகாய் நீர் குடிக்கக் கட்டாயப் படுத்தியுள்ளார்," என்றார் அவர்.

விசாரணையில் இருப்பவர்களையோ, சம்பந்தப்பட்ட காப்பகத்தையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ பாதிக்கும் வகையிலான ஆத்திரமூட்டும் கருத்துகள் மற்றும் அவதூறான செய்திகளைப் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

2001-ஆம் ஆண்டு சிறுவர் சட்டத்தின் 31 (1)(a) பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, தாமான் ஸ்ரீ குளுவாங்கில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சிறுவன் ஒருவன் உடல் ரீதியாகத் துன்புறுத்தப் படுவதாகவும், தண்டிக்கப் படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வைரலாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குழந்தைகள் காப்பக நிர்வாகம் மன்னிப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டதுடன், இவ்விவகாரம் குறித்து உள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.