ஷா ஆலாம், மார்ச் 19: பெட்டாலிங் ஜெயா வில் உள்ள தங்க நகைக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் சந்தேக நபர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்த வழக்கு முடிவுக்கு வந்ததாகக் கருதப் படுகிறது.
சந்தேக நபர் இறந்து விட்டதால் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததாகக் கருதுவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் ஷம்சுடின் மாமாட் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது சந்தேக நபருடன் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாவலரிடம் விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"பாதுகாவலரின் வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பல நபர்களிடமிருந்தும் வாக்குமூலங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்," என்று அவர் இன்று ஹரியான் மெட்ரோவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக துணை அரசு வழக்கறிஞர் (TPR) அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு முன், விசாரணை அறிக்கையை முழுமைப் படுத்தும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, தங்க நகைக் கடையைக் கொள்ளையடிக்க முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர், தனியாக இந்தச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்த உள்நாட்டு ஆடவர் மீது முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் ஷம்சுடின் தெரிவித்திருந்தார்.
காலை 10.59 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், கத்தியுடன் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர், கடையில் உள்ள நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது பாதுகாவலருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு தப்பிக்கத் தவறினார்.
மோதலின் போது பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டதில் சந்தேக நபர் காயமடைந்தார். அந்தப் பாதுகாவலரும் காயங்களுக்கு உள்ளானார்.
இருவரும் சிகிச்சைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு (PPUM) கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சந்தேக நபர் காலை 11.53 மணியளவில் மருத்துவமனையில் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.
தங்க நகைக் கடை கொள்ளைச் சம்பவம் முடிவுக்கு வந்தது; பாதுகாவலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது
19 மார்ச் 2026, 6:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
டாஷ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெறிக்கு எதிராக கார் ஓட்டிய மூதாட்டி கைது செய்யப்பட்டார்
Pakiya
20 மே 2026
selangor
சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்த 2,500-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் கிட்டத்தட்ட RM1 மில்லியன் மதிப்பீட்டு வரித் தள்ளுபடியைப் பெற்றுள்ளனர்
Pakiya
11 மார்ச் 2026

selangor
பகடிவதை சம்பவங்களைத் தடுக்க பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - கிள்ளான் மாவட்டக் காவல்துறை
Shalini Rajamogun
15 ஜூலை 2026

national
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
Shalini Rajamogun
10 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



