குவாந்தான், மே 29 – பெக்கான், குவாந்தான்-சிகாமட் சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த கணவன் மனைவியின் வாரிசுகளுக்கு பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா தனது இரங்கலைத் தெரிவித்து நன்கொடை வழங்கினார்.
பகாங் சுல்தானின் சிறப்பு அந்தரங்கச் செயலாளர் டோக் அரியா ரக்னா அஹ்மத் நோர்பாடெலின் அப்துல் முராட், நேற்று இங்குள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் (HTAA) உயிரிழந்த இன்ஸ்பெக்டர் ஷா லோக்மான் லுட்சா ரம்லி, 50, மற்றும் அவரது மனைவி நூருல்ஃபிசா அர்டியானா அம்பாக், 46, ஆகியோரின் வாரிசுகளிடம் சுல்தானின் நன்கொடையை வழங்கியதாக பகாங் சுல்தானகம் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
அந்த விபத்தில் காயமடைந்த தம்பதியரின் இரண்டு மகன்களான முகமது அதிப் ஷா லோக்மான் லுட்சா, 18, மற்றும் முகமது அகிஃப் ஷா லோக்மான் லுட்சா, 10, ஆகியோர் தற்போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தில் (IPD) பணியாற்றி வந்த ஷா லோக்மான் லுட்சாவும், நூருல்ஃபிசா அர்டியானாவும் பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் பட்டது.
"சம்பவம் நடந்தபோது, தம்பதியர் தங்களின் நான்கு பிள்ளைகளுடன் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுவதற்காக நெகிரி செம்பிலானில் உள்ள தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்" என அப்பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெக்கான் விபத்தில் உயிரிழந்த தம்பதியரின் வாரிசுகளுக்கு பகாங் சுல்தான் நன்கொடை வழங்கினார்
29 மே 2026, 8:06 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பகாங் - சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வருகை: முதலீடுகளை ஈர்க்க வியூகம்
Shalini Rajamogun
6 மே 2026

sukankini
சுக்மா போட்டிகளுக்காக 769 பகாங் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

national
பகாங்கில் வெள்ளம் சீரடைந்து வருகிறது
Evelyn Moses
22 டிசம்பர் 2025

national
சிலாங்கூரில் வெள்ள பாதிப்பு -இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைகிறது
Pakiya
7 டிசம்பர் 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?

