கோலாலம்பூர், டிசம்பர் 6 — பெர்லிஸில் வெள்ள நிலைமை முழுமையாக சீரான நிலையில், பேராக் மற்றும் சிலாங்கூரில் நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. ஆனால் பகாங்கில் இன்று மாலை இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் சற்று உயர்வாக பதிவாகியுள்ளது.
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக மீட்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 104 குடும்பங்களைச் சேர்ந்த **306 பேர்** இருந்த நிலையில், தற்போது கடுமையாகக் குறைந்து **49 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர்** மட்டுமே உள்ளனர்.
சமூக நலத்துறையின் InfoBencana இணையதளத்தின்படி, தற்போது **கோல சிலாங்கூர் மாவட்டத்தில் 3 மீட்பு மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
பெரிலிஸில் - இன்று காலை 8 மணி வரை 15 பேரை தங்க வைத்திருந்த பாடாங் புசார் பெல்க்ரா லுபெக் சிரே SK-யில் உள்ள கடைசி மீட்பு மையம் காலை 10 மணிக்கு மூடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், மாநில பாதுகாப்புப் படை (APM) இயக்குநர் மொஹ்ட் இசைமி முகமட் டாவுட் கூறுகையில், இரண்டாவது அலை வெள்ளம் உள்ளிட்ட எந்த ஒரு சூழலுக்கும் முழு எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருப்பதாகவும், பொது மக்களும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும், சமீபத்திய தகவல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பகாங்கில்- ரவுப் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் புகுந்ததால், இன்று மாலை மீட்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டோர் எண்ணிக்கை காலையில் 7 பேர் இருந்த நிலையில், 12 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் ஆக உயர்ந்துள்ளது.
InfoBencana தகவலின்படி, கம்போங் உலு சுங்கை சமூக மண்டபத்தில் ஒரு மீட்பு மையம் திறக்கப்பட்டு, அதில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குவாந்தான் SM பெண்டிடிகான் காஸ் வோகேஷனல் மீட்பு மையத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இன்னும் உள்ளனர்.
பேராக்கில்- வெள்ள பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், மூன்று மாவட்டங்களில் உள்ள 11 மீட்பு மையங்களில் 376 குடும்பங்களைச் சேர்ந்த 1,280 பேர் மட்டுமே தங்கவைக்கப் பட்டுள்ளனர் (காலையில் 430 குடும்பங்களைச் சேர்ந்த 1,455 பேர்).மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின்படி,
ஹிலிர் பேராக்- (660 பேர்), பாகான் டத்தோ- (376 பேர்), மஞ்சோங்- (244 பேர்) ஆகியவை அதிக பாதிப்பு கொண்ட பகுதிகளாக உள்ளன.மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) தகவல்: - சுங்கை பிடோர் (சாங்காட் ஜோங்) நீர்மட்டம் அபாய நிலையில் 3.77 மீட்டர் (இயல்பு நிலை: 2 மீ) - சுங்கை சிலிம் (ஸ்லிம் ரிவர்) நீர்மட்டம் அபாய நிலையில் 26.79 மீட்டர் (இயல்பு நிலை: 23.5 மீ) இருப்பதக அது தெரிவித்தது



