குவாந்தான், டிசம்பர் 22: பகாங்கில் வெள்ள நிலைமை சீரடைந்து வருவதால், தற்காலிக இடப்பெயர்வு மையங்களில்(PPS) தங்கி இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 859 குடும்பங்களைச் சேர்ந்த 2,575 பேருடன் ஒப்பிடும்போது இன்று காலை 167 குடும்பங்களைச் சேர்ந்த 580 பேராக குறைந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி ஐந்து மாவட்டங்களில் எட்டு தற்காலிக இடப்பெயர்வு மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாக பகாங் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது. பெக்கானில் மூன்று, பேராவில் இரண்டு மற்றும் குவாந்தான், தெமர்லோ மற்றும் மாரானில் தலா ஒன்று என்று தெரிவித்தனர்.
மேலும் குவாந்தனில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர். மாரன் மாவட்டத்தில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர், தெமர்லோவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுபுக் பாகுவில் உள்ள பகாங் ஆறு 19.39 மீட்டரும், பெக்கானில் உள்ள கோல சுங்கை சினியில் உள்ள ஆறு 15.73 மீட்டரும் என இரண்டு முக்கிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டதாக தெரிவித்தார்.


