ஷா ஆலம், ஏப்ரல் 29: சுக்மா 2026 போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற முந்தைய சர்ச்சை இருந்தபோதிலும், பகாங் விளையாட்டு வீரர்களின் முன் ஏற்பாடுகள் பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறுகின்றன.
பகாங் மாநில விளையாட்டு மன்றத்தின் இயக்குனர் மஹாதிர் அப்துல் ரஃபார், பட்டியலிடப்பட்டுள்ள 769 விளையாட்டு வீரர்களும் எவ்வித இடையூறுமின்றி பயிற்சியில் முழு கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான இறுதி கட்ட தயாரிப்பில் பெரும்பாலான அணிகள் தற்போது ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார் என பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
"வழக்கமாக, சுக்மா போட்டிகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, வீரர்கள் போட்டிக்கு முந்தைய கட்டத்தில் இருப்பார்கள். இக்கட்டத்தில், தந்திரோபாயங்களை வலுப்படுத்துதல், போட்டிப் பயிற்சிகள் மற்றும் பயிற்சியின் தீவிரத்தை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்."
"அதே வேளையில், காயம் ஏற்படுவதைத் தவிர்க்க, செயல்திறன், மனநலம் மற்றும் மீட்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்," என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் ஒப்புதலைப் பெற்று, சுக்மா சிலாங்கூர் 2026 போட்டிகள் திட்டமிட்டபடி தொடரும் என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.
இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை சிக்கனமான செலவின அணுகுமுறையுடன் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் ஷா ஆலம் அரங்கத்தின் புனரமைப்பு போன்ற தற்போதைய காரணங்களால் போட்டிகளை ஒத்திவைக்க முன்பு பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், வீரர்களின் செயல்திறன் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மாநில விளையாட்டு வீரர்களின் முன் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றன.
சுக்மா போட்டிகளுக்காக 769 பகாங் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்
29 ஏப்ரல் 2026, 7:20 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சுக்மா, பாரா சுக்மா: சிலாங்கூர் வீரர்களுக்கு நவம்பரில் கிட்டத்தட்ட RM7 மில்லியன் ஊக்கத்தொகை
Suhaila Shahrul Annuar
26 செப்டெம்பர் 2026

selangor
சிலம்ப விளையாட்டின் வளர்ச்சி ; நிதி ஒதுக்கீட்டுக்கான முயற்சிகள் எடுக்கப்படும் - பாப்பாராய்டு
Evelyn Moses
28 ஆகஸ்ட் 2026

video
Zen Hong, Eliza named best athletes of Selangor SUKMA 2026
Kathiravan Manoharan
25 ஆகஸ்ட் 2026

video
State declares Sept 1 holiday after winning SUKMA
Kathiravan Manoharan
25 ஆகஸ்ட் 2026

வகைsukankini
உங்கள் கருத்து என்ன?



