ஷா ஆலம், மே 24: அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திற்கு சிலாங்கூர் மாநிலப் பிரதிநிதிகள் மேற்கொண்டுள்ள பயணம், செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) தொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், நாட்டின் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக உயர் திறன் கொண்ட மனித வளத்தை உருவாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய தொழில்நுட்பத்துறை விரைவான மாற்றத்திற்கு உள்ளாகி வரும் இக்காலத்தில், "சிலிக்கான் டெசர்ட்" (Silicon Desert) என்று அழைக்கப்படும் இப்பகுதிக்கு மேற்கொள்ளப்படும் இப்பயணம், மூலோபாய ஒத்துழைப்பைத் துரிதப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் (எக்ஸ்கோ) இங் ஸி ஹான் தெரிவித்தார்.
அரிசோனாவில் உள்ள உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுக்குச் செல்வதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் திறமையாளர்களின் மேம்பாட்டில் இப்பயணத்தின் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
"31 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுக்குச் சென்று, தொழில்துறை வளர்ச்சியின் முக்கிய உந்துசக்திகளான தொழில்நுட்பம் மற்றும் திறமையாளர்கள் ஆகிய இரு கூறுகளில் கவனம் செலுத்தி எங்களது முதல் நாளின் நிகழ்ச்சி நிரலை உடனடியாகத் தொடங்கினோம்."
"மலேசியாவின் எதிர்கால வளர்ச்சியானது, ஃப்ரண்ட்-எண்ட் வேஃபர் ஃபேப்ரிகேஷன் (front-end wafer fabrication) மற்றும் மேம்பட்ட சிப் பேக்கேஜிங் (advanced chip packaging) உள்ளிட்ட செமிகண்டக்டர் சங்கிலியில் நாம் எந்த அளவிற்கு முன்னேறுகிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்" என்று அவர் தனது முகநூல் (Facebook) பதிவில் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்திக்கான முக்கிய மையமாக விளங்கும் இன்டெல் கார்ப்பரேஷனுக்குச் (Intel Corporation) சொந்தமான ஒகோட்டிலோ (Ocotillo) வளாகத்தில் சிலாங்கூர் பிரதிநிதிகள் தங்களது அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடங்கினர் என்று ஸி ஹான் கூறினார்.
"நமது நாட்டில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அளவுகோலாகப் பயன்படுத்தக்கூடிய செயல்பாட்டுத் தரநிலைகள் (standard operasi) மற்றும் விற்பனையாளர் சுற்றுச்சூழல் அமைப்பு (ekosistem vendor) மேம்பாடு குறித்த விழிப்புணர்வைப் பெறுவதற்கு இந்த வருகை மிகவும் முக்கியமானது," என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் மின் மற்றும் மின்னணு (E&E) சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய தூணாக விளங்கும் இன்டெல் நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவுடன் வலுவான உறவைக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
அதே வேளையில், உயர்தொழில்நுட்பத் துறையில் நிலவும் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையைத் தீர்க்கும் முயற்சியாக, அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் (ASU) உள்ள மேக்ரோடெக்னாலஜி ஒர்க்ஸ் (Macrotechnology Works) மையத்திற்கும் சிலாங்கூர் பிரதிநிதிகள் சென்று அங்குள்ள 'பயிற்றுவிப்பாளருக்குப் பயிற்சி அளிக்கும்' (Train-the-Trainer) திட்டம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
நிலையான திறமையாளர்களை உருவாக்குவதற்கும், தொழில்துறையின் எதிர்காலத் தேவைகளை எதிர்கொள்வதற்குத் தயாராவதற்கும் இந்த முயற்சி மலேசியாவின் மேம்பட்ட செமிகண்டக்டர் அகாடமியுடன் (ASEM) ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியில் மலேசியாவின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் முயற்சிகளில், எல்லை தாண்டிய நிறுவன உறவுகள் மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகியவை மிக முக்கியமான கூறுகளாக மாறியுள்ளன என்றும் இங் ஸி ஹான் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் குறைக்கடத்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சிலாங்கூர் அரசு
24 மே 2026, 5:51 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
எதிர்கால பொருளாதாரத் தேவைகளை எதிர்நோக்க சிலாங்கூரின் உயர் தாக்கத் துறைகள் மேம்படுத்தப்படும் - டத்தோ மந்திரி புசார்
Shalini Rajamogun, Norrasyidah Arshad
11 ஜூன் 2026

antarabangsa
அமெரிக்கா உலகக் கிண்ணத்தை வென்றால் நிலவுக்குக் கால்பந்து அனுப்பப்படும்; நாசா (NASA) சவால்
Shalini Rajamogun
1 ஜூலை 2026

antarabangsa
ஹார்முஸ் நீரிணை: 11,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளை மீட்க சர்வதேச கடல்சார் நிறுவனம் திட்டம்
Shalini Rajamogun
24 ஜூன் 2026

national
BUDI95 திட்டத்தின் கீழ் 200 லிட்டர் ஒதுக்கீடு தொடரும்
Shalini Rajamogun
23 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



