திரெட்ஸ் (Threads) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் இலவச ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டம் குறித்த தகவலை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) மறுத்துள்ளது.
இலவசமாக ஓட்டுநர் உரிமம் வழங்குவதாகப் பரப்பப்படும் போலி விளம்பரங்கள் குறித்து பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாக ஜேபிஜே தெரிவித்தது. பரவி வரும் இந்த விளம்பரம் போலியானது என்றும், தங்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.
"எனவே, சந்தேகத்திற்குரிய சமூக ஊடகக் கணக்குகள் அல்லது தளங்கள் மூலம் வழங்கப்படும் எந்த ஒரு விளம்பரத்தையும் கண்டு மக்கள் எளிதில் ஏமாற வேண்டாம். இதன் மூலம் தேவையற்ற குழப்பங்களையும் நிதி இழப்புகளையும் தவிர்க்கலாம்" என்று ஜேபிஜே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில், இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ 'மை லைசென் பி2' (MyLesen B2) திட்டத்துடன் இதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்றும் ஜேபிஜே பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பதிவு செய்யத் தொடர்பு கொள்ளப் படுவார்கள் என்றும் அந்த அறிக்கை விளக்கியது.
தங்கள் துறையின் சேவைகள் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும், தலைமையகம் மற்றும் மாநிலங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கங்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தளங்கள் வழியாக மட்டுமே வெளியிடப்படும் என ஜேபிஜே மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வமற்ற கணக்குகள் மூலம் தங்களது சேவைகள் குறித்த எந்தத் தகவலும் வெளியிடப் படுவதில்லை என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.
"எந்த ஒரு தகவலையும் நம்புவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்னர், பொதுமக்கள் எப்போதும் ஜேபிஜே-வின் அதிகாரப்பூர்வ தளங்களில் அதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
மேலதிக புகார்கள் அல்லது விசாரணைகளுக்கு, https://jpj.spab.gov.my/ என்ற ஜேபிஜே-வின் அதிகாரப்பூர்வ புகார் இணையதளத்தை பயன்படுத்தலாம். மோசடிகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க ஜேபிஜே தொடர்ந்து பாடுபடும்.
இலவச ஓட்டுநர் உரிமம்: பரவும் செய்தியை மறுத்தது ஜே.பி.ஜே (JPJ); பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
2 மே 2026, 3:16 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
KLIA-வில் பயணிகளிடம் RM800 வரை கட்டணமாக சுரண்டும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள்
Latchumy Ramamoorthy
7 ஜூலை 2026

selangor
முன்னாள் தேசிய கால்பந்து வீரர், தன்முனைப்பு பேச்சாளரை JPJ கைது செய்தது
Pakiya
26 மே 2026

selangor
P-Hailing ஊழியர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஜேபிஜே தீவிரப்படுத்துகிறது
Pakiya
14 ஏப்ரல் 2026

national
பெண்ணை மடியில் அமர வைத்து ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிய நபர் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணையும் போலீஸ் தேடி வருகிறது
Pakiya
14 ஏப்ரல் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



