ஷா ஆலம், ஏப்ரல் 24: கிள்ளானில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவ வெளிநாட்டுப் பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி எஸ். விஜய ராவ், நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் ஒரு வீட்டில் வெளிநாட்டு ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறினார்.
சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 32 வயதான அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டப் பிரிவு 302-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலே இச்சம்பவத்திற்குக் காரணம் என நம்பப்படுகிறது. மேலதிக விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது பொது அமைதியைக் குலைக்கும் ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
சமூகத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தரப்பினர் மீது தற்போதுள்ள சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என்றும் அவர் எச்சரித்தார்.
கிள்ளானில் ஆடவர் சடலம் மீட்பு; விசாரணைக்கு உதவ வெளிநாட்டுப் பெண் கைது
24 ஏப்ரல் 2026, 3:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
இணைய மோசடி கும்பலுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் கைது
Bernama
16 ஆகஸ்ட் 2026

national
தாய்லாந்தில் 87kg போதைப் பொருளுடன் 3 மலேசியர்கள் கைது!
Shalini Rajamogun
4 ஆகஸ்ட் 2026

national
கிள்ளான் ஆற்றில் இந்தோனேசியப் பெண்ணின் சடலம் மீட்பு; போலீஸ் விசாரணை
Shalini Rajamogun
5 ஆகஸ்ட் 2026

national
RM14,000 லஞ்சம் பெற்றதாக இரு ரோந்து போலீசார் கைது – SPRM விசாரணை
Media Selangor Team
17 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



