கோலாலம்பூர், ஏப்ரல் 24 -- பெர்லிஸ், கெடா மற்றும் கிளந்தானில் உள்ள 10 பகுதிகளுக்கு மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) இன்று முதல் நிலை வெப்ப வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
MetMalaysia வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, பெர்லிஸ் மாநிலம் முழுவதும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கெடாவில், பொக்கோ சேனா, பாடாங் தெராப், பெண்டாங் மற்றும் சிக் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும்.
கிளந்தானில், மச்சாங், கோல கிராய், பாசிர் மாஸ், ஜெலி மற்றும் தானா மேரா ஆகிய பகுதிகள் பாதிக்கப் பட்டுள்ளன.
MetMalaysia-இன் கூற்றுப்படி, ஒரு பகுதியின் தினசரி அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸை எட்டும்போது முதல் நிலை (எச்சரிக்கை) விடுக்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள தினசரி வெப்ப வானிலை நிலவரம் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற, பொதுமக்கள் https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ என்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தைப் பார்வையிடலாம்.
-- பெர்னாமா
பெர்லிஸ், கெடா, கிளந்தானில் 10 பகுதிகளில் முதல் நிலை வெப்ப அலை எச்சரிக்கை
24 ஏப்ரல் 2026, 3:24 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா
Bernama
16 ஆகஸ்ட் 2026

national
குறைவான மழையால் புகை மூட்டம் 2-5 தினங்களுக்கு நீடிக்கும் : வானிலை ஆய்வுத் துறை
Bernama
13 ஆகஸ்ட் 2026

national
சிலாங்கூரின் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூரில் 5 மாவட்டங்களில் மதியம் மணி 12 வரை கனமழை எச்சரிக்கை
Media Selangor Team
9 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?

