குவாந்தான், ஏப்ரல் 21: கேமரன் மலை, ஹபு ஹைட்ஸ் பகுதியில் இன்று பிற்பகல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய கனமழையின் காரணமாக, உயரமான பகுதிகளில் இருந்து சேற்று நீர் ரிங்லெட்டின் பிரதான சாலையை நோக்கி வேகமாகப் பாய்ந்ததாக கேமரன் மலை மாவட்ட காவல் துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.
"இருப்பினும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப் பட்டதுடன், பிற்பகல் 4 மணியளவில் வெள்ள நீர் முழுமையாக வடிந்தது," என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அஸ்ரி தெரிவித்த போதிலும், வெள்ளப் பெருக்கில் இரண்டு வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது தொடர்பாக இரண்டு காவல் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அப்பகுதியில் உள்ள சாலைகள் தற்போது போக்குவரத்துக்கு பாதுகாப்பாக உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
கேமரன் மலையில் திடீர் வெள்ளம்
21 ஏப்ரல் 2026, 1:28 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பகாங் - சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வருகை: முதலீடுகளை ஈர்க்க வியூகம்
Shalini Rajamogun
6 மே 2026

sukankini
சுக்மா போட்டிகளுக்காக 769 பகாங் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

national
பகாங்கில் வெள்ளம் சீரடைந்து வருகிறது
Evelyn Moses
22 டிசம்பர் 2025

national
சிலாங்கூரில் வெள்ள பாதிப்பு -இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைகிறது
Pakiya
7 டிசம்பர் 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



