பல மாநிலங்களில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா

20 ஏப்ரல் 2026, 9:06 AM
பல மாநிலங்களில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற வானிலை எச்சரிக்கை புத்ராஜெயா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் விளக்கப்படி, ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படும் போதும், அத்தகைய கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று கணிக்கப்படும் போதும் இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இது அதிகபட்சமாக ஆறு மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஒரு குறுகிய கால எச்சரிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறும், வானிலை மாற்றங்கள் குறித்த உடனுக்குடனான மற்றும் துல்லியமான தகவல்களைப் பெற மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.met.gov.my என்ற முகவரியையோ அல்லது அவர்களின் சமூக ஊடகப் பக்கங்களையோ பின்தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், 'myCuaca' எனும் கைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலமும் உடனுக்குடன் வானிலை நிலவரங்களை அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.