உலகளாவிய அழுத்தம் இருந்தபோதிலும் மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காண்கிறது

17 ஏப்ரல் 2026, 9:17 AM
உலகளாவிய அழுத்தம் இருந்தபோதிலும் மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காண்கிறது

கோலாலம்பூர், ஏப்ரல் 17: புவிசார் அரசியல் பதற்றங்களால் அதிகரித்து வரும் எண்ணெய் விலை உள்ளிட்ட உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரம் மீள்தன்மையுடன் வலுவாக உள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியப் பொருளாதாரம் 5.3 விழுக்காடு வளர்ச்சி காணும் என மலேசியப் புள்ளிவிவரத் துறை (DOSM) கணித்துள்ளது.

உற்பத்தித் துறை 2026ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என தலைமைப் புள்ளியியலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் கூறினார். குறிப்பாக, ஏற்றுமதி சார்ந்த தொழில்களால் உந்தப்பட்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முறையே 7.3 மற்றும் 4.2 விழுக்காடு வளர்ச்சியை இத்துறை பதிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

சீனப் புத்தாண்டு, ரமலான் மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பருவகால செலவுகள், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக அவர் கூறினார்.

"ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம் (SARA) மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள சரிசெய்தலின் இரண்டாம் கட்ட அமலாக்கம் போன்ற காரணிகளுடன், விநியோக வர்த்தக விற்பனையில் நிலையான வளர்ச்சிக்கு இது பங்களித்துள்ளது.

இதன் விளைவாக, ஜனவரியில் 7.3 விழுக்காடும், பிப்ரவரியில் 5.3 விழுக்காடும் இந்த விற்பனை அதிகரித்துள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.