சிலாங்கூர் படைப்பாற்றல் பொருளாதாரத் திட்டம்: பாதேக் துறைக்கு முன்னுரிமை

26 செப்டெம்பர் 2026, 9:44 AM
சிலாங்கூர் படைப்பாற்றல் பொருளாதாரத் திட்டம்: பாதேக் துறைக்கு முன்னுரிமை

ஷா ஆலாம், செப்.26 – படைப்பாற்றல் துறையின் பல்வேறு பிரிவுகளுடன் மாநில அரசு மூலோபாய ரீதியில் தொடர்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனை சிலாங்கூர் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இந்த ஆண்டு பாதேக் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதுடன், அந்தத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகளைப் பொதுமக்களிடம் காட்சிப்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

சிலாங்கூர் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி

அதனை தொடர்ந்து குறும்படத் தயாரிப்பு மற்றும் அனிமேஷன் உள்ளிட்ட அதிக ஆற்றல் கொண்ட பிற பிரிவுகளையும் ஆராய்வோம்.

கடந்த ஆண்டு அமிருடின், 2025 முதல் 2035ஆம் ஆண்டு வரையிலான சிலாங்கூர் படைப்பாற்றல் பொருளாதார செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

பத்து ஆண்டுகளுக்கான இந்த மேம்பாட்டு கட்டமைப்பானது, சிலாங்கூரை உலகளவில் போட்டித்தன்மை கொண்ட பிராந்திய படைப்பாற்றல் பொருளாதார மையமாக நிலைநிறுத்துவதுடன், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் டிஜிட்டல் மற்றும் பல்லூடகம், கலை மற்றும் கலாச்சாரம், அத்துடன் கலாச்சார மரபு ஆகிய மூன்று முக்கியத் தூண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே, படைப்பாற்றல் பொருளாதார மன்றத்தை அமைப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து கருத்து தெரிவித்தார் நஜ்வான். அதன் நோக்கங்களும் செயல்பாட்டு கட்டமைப்பும் பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த விவகாரம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.