ஷா ஆலம், ஏப்ரல் 17: நாட்டின் பல மாநிலங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்திலும் சீரற்ற வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபகற்பத்தின் வடபகுதியில் பெர்லிஸ் மற்றும் கெடாவின் குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போக்கோக் சேனா, பாடாங் தெராப், யான், பெண்டாங், சிக் மற்றும் பாலிங் ஆகிய பகுதிகளில் மழை நீடிக்கும்.
பேராக் மாநிலத்தில் கெரியான், லாரூட், மாதாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலா கங்சார், கிந்தா, காம்பார், பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளந்தானில் ஜேலி பகுதியும், திரங்கானுவில் பெசுட், உலு திரங்கானு மற்றும் கெமாமான் ஆகிய இடங்களும் மழையினால் பாதிக்கப்படக்கூடும்.
பகாங் மாநிலத்தில் கேமரன் மலை, லிப்பிஸ், ரவுப், ஜெரண்டுட், பெந்தோங், தெமர்லோ, குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளில் மோசமான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஜோகூர் மாநிலம் மற்றும் சரவாக்கின் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெத்தோங், சிபு மற்றும் முக்கா ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இந்தச் சீரற்ற வானிலை நிலவும் வேளையில், திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கும் மரங்கள் முறிந்து விழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதால், பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






