கோலாலம்பூர், ஏப்ரல் 10: தீபகற்ப மலேசியாவில் உள்ள 10 பகுதிகளில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, நிலை 1 வெப்ப அலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்ட அறிக்கையின்படி, கிளந்தானில் உள்ள தானா மேரா, பாசிர் மாஸ் மற்றும் மாச்சாங் பகுதிகளும், பகாங்கில் உள்ள ஜெராண்டுட், தெமர்லோ மற்றும் மாரான் பகுதிகளும் இதில் அடங்கும்.
மேலும், பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா, சிலாங்கூரில் உள்ள கோம்பாக், நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்போல் மற்றும் ஜோகூரில் உள்ள சிகாமாட் ஆகிய பகுதிகளிலும் வெப்பமான வானிலை நிலவுகிறது.
ஒரு பகுதியின் தினசரி அதிகபட்ச வெப்பநிலை, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் போது நிலை 1 அல்லது எச்சரிக்கை நிலை வெப்ப அலை அறிவிக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வெப்பமான வானிலை குறித்த சமீபத்திய தகவல்களைப் பொதுமக்கள் https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
தீபகற்ப மலேசியாவில் 10 இடங்களில் வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது
10 ஏப்ரல் 2026, 1:38 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சூப்பர் எல் நினோ அபாயம்: முன்கூட்டியே தயாராக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
Shalini Rajamogun
19 ஜூலை 2026

antarabangsa
கடுமையான வெப்ப அலை காரணமாக பிரிட்டனில் 2,877 பேர் உயிரிழப்பு
Shalini Rajamogun
31 ஜூலை 2026

antarabangsa
சியோலில் வெப்ப அலை தாக்கம்; கோடையில் இரண்டாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டது
Shalini Rajamogun
29 ஜூலை 2026

antarabangsa
ஜப்பானில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் வெப்பநிலை
Shalini Rajamogun
22 ஜூலை 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



