பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 9: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிஏஜே), சுகாதாரம், பொருளாதாரம், சமூகப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய ‘பெட்டாலிங் ஜெயா பராமரிப்பு பொருளாதார செயல் திட்டம் 2025-2030’ மூலம் மூத்த குடிமக்களின் நலனில் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டம் மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்துடன் (PPUM) இணைந்து தொழில்முறை பராமரிப்பாளர்களின் திறன்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமது ஸஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.
"கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்ற 'பெட்டாலிங் ஜெயா மூத்த குடிமக்கள் பராமரிப்பு பயிலரங்கு 2025' மூலம் PPUM உடன் இணைந்து தொழில்முறை பயிற்சி அளித்து, மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு அமைப்பை வலுப்படுத்த எம்பிஏஜே உறுதிபூண்டுள்ளது," என்றார்.
"2020-இல் 7.5 விழுக்காடாக இருந்த 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2025-இல் 12.6 விழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு, அவர்கள் சுறுசுறுப்பாகவும் நலமுடனும் இருப்பதை உறுதிசெய்ய, மேலும் நட்பார்ந்த மற்றும் உகந்த நகரச் சூழலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது," என்று அவர் கூறினார்.
கடந்த மார்ச் 11-ஆம் தேதி மெனாரா எம்பிபிஜே-வில் உள்ள மேயர் அலுவலகத்தில், 'பெட்டாலிங் ஜெயா மூத்த குடிமக்கள் செயல் திட்டம் 2030' அமலாக்கத்தின் முன்னேற்றம் குறித்துப் பகிர்ந்துகொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் (OKU) பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை எளிதாக்க, 'அனைவருக்குமான வடிவமைப்பு' அம்சங்களுடன் கூடிய பிஜே சிட்டி பஸ் மற்றும் வேன் டிரான்சிட் சேவைகளை எம்பிபிஜே வழங்குவதாகவும் முகமது ஸஹ்ரி குறிப்பிட்டார்.
இது தவிர, தாமான் அமான் போன்ற இடங்களில் சிறப்பு உடற்பயிற்சிக் கருவிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உகந்த வசதிகள் சேர்க்கப்பட்டு, 23 நகர மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இது மிகவும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குகிறது.
"தேவைகளைப் பூர்த்தி செய்ய, 67 மூத்தோர் பராமரிப்பு மையங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் இருப்பதை உறுதி செய்வதோடு, இலவச மருத்துவப் பரிசோதனை வசதிகளையும் எம்பிஏஜே வழங்குகிறது."
"அதே நேரத்தில், ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டத்திலும் 'அனைவருக்குமான வடிவமைப்பு' பின்பற்றப்படுவதை எம்பிஏஜே உறுதி செய்கிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கு வசதியான மற்றும் எளிதான அணுகலை உறுதிப்படுத்த பிரத்யேக வாகன நிறுத்துமிடங்களையும் வழங்குகிறது," என்று அவர் விளக்கினார்.
இத்திட்டம் மூத்த குடிமக்களின் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வை வளர்ப்பதையும், ஒரு நிலையான பராமரிப்பு சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று முகமட் ஸஹ்ரி வலியுறுத்தினார்.
'பெட்டாலிங் ஜெயா பராமரிப்பு பொருளாதார செயல் திட்டம் 2025-2030', மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நட்பார்ந்த ஒரு ஸ்மார்ட் சிட்டியாக பெட்டாலிங் ஜெயாவை மாற்றும் நோக்கத்திற்கு இணங்க, மற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரு முன்னோடி மாதிரியாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மூத்த குடிமக்களுக்கான சூழலை வலுப்படுத்த தொழில்முறை பராமரிப்பாளர்களுக்கு எம்பிபிஜே பயிற்சி
9 ஏப்ரல் 2026, 6:46 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பெட்டாலிங் ஜெயா மாநகரத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: சிறப்புப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கைத் தம்பதியரின் குழந்தை
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
பெட்டாலிங் ஜெயாவை முதியோருக்கு உகந்த நகரமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் அமலாக்கம்
Shalini Rajamogun, Adam Azman
13 ஜூன் 2026

selangor
சுய-தணிக்கை மேலாண்மை அமைப்பு அறிமுகம் - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
Shalini Rajamogun
9 ஜூன் 2026

selangor
முதியவர்களுக்கு திறன்பேசி வகுப்புகள்: இலக்கவியல் இடைவெளியைக் குறைக்கும் முயற்சி
Farzana Rozaidee
5 ஜூலை 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



