அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால், ஈரான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தத் தயார்

8 ஏப்ரல் 2026, 4:14 AM
அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால், ஈரான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தத் தயார்

கோலாலம்பூர், ஏப்ரல் 8: அமெரிக்கா (AS) தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால், ஈரான் தனது தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.

"ஈரான் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வந்தால், எங்கள் ஆயுதப் படைகள் தங்களின் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிடும்," என்றார் அவர்.

"தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டு, ஈரானிய ராணுவத்துடன் ஒருங்கிணைந்து, அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான பாதைக்கு அனுமதிக்கப்படும்," என்று அராச்சி புதன்கிழமை எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

15 முன்மொழிவின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கை மற்றும் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக ஈரானின் 10 முன்மொழிவுகளை
ஏற்றுக்கொள்வதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரின் பங்களிப்பிற்காக அராச்சி தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

முன்னதாகப், பாகிஸ்தான் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தியை "முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும்" ஈரான் மீண்டும் திறப்பதைப் பொறுத்து, திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நிறுத்த அவர் ஒப்புக்கொண்டார்.

"ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். இது இரு தரப்புக்கும் போர் நிறுத்தமாக இருக்கும்," என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே பிப்ரவரி 28 அன்று வாஷிங்டனும் டெல் அவிவும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கிய பின்னர், அதிகரித்து வரும் ராணுவ நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஒரு பரந்த மோதலுக்குள் தள்ளியுள்ளன. இது உலகச் சந்தைகள் மற்றும் விமானப் பயணங்களைப் பாதித்துள்ளதுடன், பொருளாதாரத்தில் பரவலான தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.