கோத்தா பாரு: காரில் கெத்தும் இலைகளைக் கொண்டு சென்ற ஒரு நபரிடமிருந்து சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக சுமார் RM12,000 லஞ்சம் கேட்டு பெற்றதாகவும் சந்தேகிக்கப்படும் நான்கு போலீஸ் அதிகாரிகள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
கிளந்தானில் உள்ள ஒரு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் அந்த அதிகாரிகள் அனைவரையும் ஏப்ரல் 11 வரை தடுத்து வைக்க, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) விண்ணப்பத்தைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் ராயிஸ் இம்ரான் ஹமிட் உத்தரவிட்டார்.
ஒரு வட்டாரத்தின்படி, 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அந்த சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிக்குள் அவரவர் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
"ஆரம்பக்கட்ட விசாரணையில், அனைத்து சந்தேக நபர்களும் டிசம்பர் 2025-இல் இந்த குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகத் தெரியவந்துள்ளது," என்று அந்த வட்டாரம் கூறியது.
"மூன்றாம் தரப்பினரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்குப் பணம் பரிமாற்றம் செய்யப் பட்டதன் மூலம் சந்தேக நபர்கள் நால்வரும் லஞ்சப் பணத்தைப் பெற்றதாக நம்பப் படுகிறது," என்று அது மேலும் தெரிவித்தது.
இதற்கிடையில், தொடர்பு கொண்டபோது, கிளந்தான் SPRM இயக்குநர் அஸ்மின் யூசோப் இந்த கைதுகளை உறுதிப்படுத்தினார். SPRM சட்டம் 2009, பிரிவு 17 (a)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
கெத்தும் இலைகளைக் கொண்டு சென்றவரிடமிருந்து சுமார் RM12,000 லஞ்சம் பெற்ற சந்தேகத்தில் போலீஸ் அதிகாரிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
7 ஏப்ரல் 2026, 5:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
35 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றார் அயோப் கான்
Bernama
26 ஜூலை 2026

selangor
பகடிவதை சம்பவங்களைத் தடுக்க பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - கிள்ளான் மாவட்டக் காவல்துறை
Shalini Rajamogun
15 ஜூலை 2026

national
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
Shalini Rajamogun
10 ஜூன் 2026

national
புக்கிட் சாங்காட் ஆசாவில் மாயமான இளம் பெண் சடலமாக மீட்பு
Shalini Rajamogun
26 மே 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



