சுங்கை பட்டாணி: இங்குள்ள தாமான் ரியா ஜெயாவில் உள்ள தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) துணை மின்நிலையத்தில் திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர், மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார்.
கோல மூடா மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் கூறுகையில், கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, மதியம் 2.08 மணியளவில், துணை மின்நிலையத்தில் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்ததாக TNB தொழில் நுட்பவியலாளர் ஒருவரிடம் இருந்து கோல மூடா மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைப்பு வந்தது.
"சம்பவ இடத்திற்கு ரோந்துப் பிரிவு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். அங்கு, சக்தி வாய்ந்த மின்சாரம் தாக்கியதால் சந்தேக நபர் துணை மின் நிலையத்திற்குள் தரையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 30 வயதான அந்த சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டு, கையில் ஏற்பட்ட பலத்த தீக் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்," என்று அவர் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை என்றும், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.
"ஆரம்ப கட்ட விசாரணையில், வேலையில்லாத அந்த நபருக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379 மற்றும் 324-இன் கீழ் இரண்டு குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது," என்றார்.
மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வரும் சந்தேக நபரிடம் மூன்று நாட்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப் பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தண்டனைச் சட்டத்தின் 457-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஹன்யான் கூறினார்.
-- பெர்னாமா
துணை மின்நிலையத்தில் திருட முயன்ற ஆடவரை மின்சாரம் தாக்கியது
1 மே 2026, 3:59 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
செமஞ்சியில் டி.என்.பி (TNB) மின்மாற்றிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
Pakiya
2 ஜூன் 2026

national
ஏப்ரல் மாத மின்சாரத் தள்ளுபடி குறைந்தது, AFA விகிதம் இப்போது 0.47 சென்/kWh
Pakiya
1 ஏப்ரல் 2026

national
TNB அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி கும்பல், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
Shalini Rajamogun
3 பிப்ரவரி 2026

national
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் மின்சார விநியோகத் தடை
Shalini Rajamogun
15 டிசம்பர் 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?

