ஷா ஆலம், ஏப்ரல் 6 – மலேசியாவின் சிலாங்கூர், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் கோலா லங்காட் ஆகிய மாவட்டங்களில் மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலாக்காவில் அலோர் காஜா மற்றும் மலாக்கா தெங்கா ஆகிய பகுதிகளிலும், ஜோகூர் மாநிலத்தில் பத்து பகாட், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடிய 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு மற்றும் இடியுடன் கூடிய அறிகுறிகள் தென்படும் போது இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த மோசமான வானிலை நிலவும் காலக்கட்டத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், பாதுகாப்பு கருதி வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.






