ஷா ஆலம், ஏப்ரல் 4: அம்பாங் ஜெயா நகராட்சி மன்றத்தின் (MPAJ) அமலாக்கப் பிரிவு நேற்று முன்தினம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சோதனையிடப்பட்ட 10 வளாகங்களில், ஏழு வளாகங்களிலிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உரிமம் இல்லாமல் வணிகம் செய்வது, பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துவது மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தக உரிம நிபந்தனைகளை மீறுவது ஆகியவை கண்டறியப்பட்ட குற்றங்களில் அடங்கும்.
"தாமான் மூடா, பாண்டான் இண்டா, தாமான் மெலாவாத்தி மற்றும் தாமான் புத்ரா சுலைமான் ஆகிய இடங்களில் தடைகள் மற்றும் உரிம நிபந்தனை மீறல்களுக்கு எதிரான இந்த அமலாக்க நடவடிக்கை நடத்தப்பட்டது."
"ஒழுங்கான, பாதுகாப்பான மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட வணிகச் சூழலை உறுதி செய்வதற்காக ஏழு பறிமுதல்கள் செய்யப் பட்டன," என்று MPAJ தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மற்றொரு நடவடிக்கையில், MPAJ-யின் உரிமம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை, தாமான் மூடா காலைச் சந்தையில் விதிமுறைகளை மீறிய பழம் மற்றும் சில்லறை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது.
"சோதனையின் போது, உரிமம் பெற்ற சில வியாபாரிகள் பொது இடங்களில் தடைகளை ஏற்படுத்தியதும், அனுமதிக்கப் பட்ட வர்த்தக எல்லைக் கோட்டிற்கு வெளியே வணிக நடவடிக்கைகளை மேற் கொண்டதும் கண்டறியப் பட்டது."
"பொதுப் பாதைகளைத் தடுக்காமல் இருப்பது மற்றும் ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குள் மட்டுமே வர்த்தகம் செய்வது உட்பட, உரிம நிபந்தனை களை வியாபாரிகள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதை MPAJ நினைவூட்டுகிறது," என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
பொதுமக்கள் புகார்கள் அல்லது தகவல்களை https://mpaj.spab.gov.my என்ற SISPAA MPAJ இணையதளம் மூலமாகவோ அல்லது 1-800-22-8100 என்ற எண்ணிற்கோ அழைக்கலாம்.
அம்பாங் ஜெயா நகராட்சி மன்றத்தின் (MPAJ) அமலாக்கப் பிரிவு நடவடிக்கை ஏழு வளாகங்களிலிருந்து பொருட்கள் பறிமுதல்
4 ஏப்ரல் 2026, 9:15 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஆறு வணிக வளாகங்களை அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) பறிமுதல் செய்தது
Pakiya
2 ஏப்ரல் 2026

selangor
அம்பாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் டிங்கி தடுப்பு நடவடிக்கை; 24 அபராதங்கள் விதிப்பு
Media Selangor Team
17 ஆகஸ்ட் 2026

selangor
சமூக ஊடகங்களில் வெளியாகும் புகார்கள் ; ஊராட்சி மன்றங்கள் விரைந்து செயல்பட வேண்டும்
Dewi Abdul Rahman
8 ஆகஸ்ட் 2026

selangor
20 ஆண்டுகளாக நீடித்த தாசிக் பெர்மாய் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு
Shalini Rajamogun
27 ஜூலை 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



