ஷா ஆலம், ஏப்ரல் 2 – அம்பாங் வட்டாரத்தில் மேற்கொள்ள பட்ட அமலாக்க நடவடிக்கையின் போது, உரிம நிபந்தனைகளை மீறிய ஆறு வணிக வளாகங்களை அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) பறிமுதல் செய்தது.
பாண்டான் இண் மற்றும் கம்போங் பாரு அம்பாங் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, நகராட்சி மன்றத்தின் துணைச் சட்டங்கள் மற்றும் உரிம நிபந்தனைகள் பின் பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த 10 வளாகங்கள் சோதனையிடப் பட்டன.
"நிர்ணயிக்கப்பட்ட உரிம நிபந்தனைகளை மீறியதற்காக மொத்தம் ஆறு பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன" என்று MPAJ முகநூல் அறிக்கை ஒன்றில் தெரிவித்து ள்ளது.
வணிக நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாகவும், ஒழுங்காகவும், நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு இணங்கியும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை முக்கியமானது என்று MPAJ கூறியது.
மேலும், வளாக உரிமையாளர்களிடையே இணக்கத்தின் அளவை அதிகரிக்க, அவ்வப் போது நடவடிக்கைகளும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அது மேலும் தெரிவித்தது.
பொதுமக்கள் தங்களது புகார்கள் அல்லது தகவல்களை MPAJ-யின் பொது புகார் மேலாண்மை அமைப்பு (SISPAA) மூலமாகவோ அல்லது 1-800-22-8100 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம்.
ஆறு வணிக வளாகங்களை அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) பறிமுதல் செய்தது
2 ஏப்ரல் 2026, 5:14 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டிகள்: அரசியல் நோக்கமின்றி மறுஆய்வு செய்ய சிலாங்கூர் அரசு தயார்
Shalini Rajamogun
16 ஜூன் 2026

selangor
இரண்டடுக்கு கொள்கலன் கட்டுமானத்தை பெட்டாலிங் ஜெயா மாநகர சபை (MBPJ) இடித்துத் தள்ளியது
Pakiya
2 ஏப்ரல் 2026

selangor
கோலா லங்காட் நகராட்சி மன்றம், பந்திங்-கிள்ளான் சாலையில் சட்டவிரோத குப்பைகளை அகற்றும் நடவடிக்கை
Pakiya
1 ஏப்ரல் 2026

national
உடல், மன மற்றும் உணர்ச்சி நலனை கவனத்தில் கொண்டு சிலாங்கூர் புதிய பராமரிப்புத் தொகுதியை உருவாக்குகிறது
Pakiya
1 ஏப்ரல் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



