செக்சன் 13 இல் உள்ள ஜயண்ட் பேரங்காடி மீண்டும் புதுப் பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது

2 ஏப்ரல் 2026, 11:52 AM
செக்சன் 13 இல் உள்ள ஜயண்ட் பேரங்காடி மீண்டும் புதுப் பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 2: ஷா ஆலம், செக்சன் 13 இல் உள்ள ஜயண்ட் பேரங்காடி மீண்டும் புதுப் பொலிவுடன் தொடங்கப் பட்டுள்ளது. இது உள்ளூர் வணிகச் சூழலை மேம்படுத்துவதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தப் பேரங்காடியின் புனரமைப்பு, புதிய குத்தகைதாரர்களை ஈர்ப்பதற்கும், தற்போதைய சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஏற்ற வகையில் வளாகத்தின் கட்டமைப்பை மாற்றுவது போன்ற சீரமைப்புப் பணிகளை உள்ளடக்கியதாக மாநில தொழில் முனைவர் ஆட்சிக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

“இந்த மாற்றம், உள்ளூர் பேரங்காடி வர்த்தக நாமத்திற்கு மீண்டும் ஆதரவளிக்க பொதுமக்களை ஈர்க்கும் என்றும், இப்பகுதியில் வணிக நடவடிக்கை-களை வலுப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது,” என்று இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

பயனீட்டாளர்களின் மாறிவரும் விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைத்துக் கொள்வதற்கான ஜயண்டின் அர்ப்பணிப்புக்கு இணங்க இந்த உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பண்டிகைக் காலங்களில் மாநில அரசு வழங்கும் ‘ஜோம் ஷாப்பிங்’ பற்றுச்சீட்டு திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஜயண்ட் ஒரு முக்கியப் பங்காளி என்பதை நஜ்வான் குறிப்பிட்டார்.“ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டு வழங்கும் முயற்சி, மக்கள் செலவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, வறுமை ஒழிப்பு ஆட்சிக் குழு உறுப்பினர் வி. பாப்பாராயுடு, இந்த ஆண்டு ரமலான் பெருநாளை முன்னிட்டு ‘ஜோம் ஷாப்பிங்’ திட்டத்தின் கீழ் 38,400 பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப் பட்டதாகவும், இதற்காக ரிம7.68 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

சிலாங்கூர் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப் பட்டதாகவும், இதன் மூலம் இலக்குக் குழுவினர் பண்டிகைக் காலத் தயார்ப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் பாப்பாராய்டு கூறியிருந்தார்.

#GiantShahAlam #UsahawanTempatan #Sokong Peniaga Kecil #Ekonomi Selangor #NajwanHalimi #Jom Shopping Selangor original news : https://mediaselangor.com/ms/2026/04/350375

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.