பெலாபோஹான் கிள்ளானில் 750 குடும்பங்களுக்குத் தலா 200 ரிங்கிட் 'ஜோம் ஷோப்பிங்' வவுச்சர்கள் விநியோகம்

16 மார்ச் 2026, 8:23 AM
பெலாபோஹான் கிள்ளானில் 750 குடும்பங்களுக்குத் தலா 200 ரிங்கிட் 'ஜோம் ஷோப்பிங்' வவுச்சர்கள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 16 - எதிர்வரும் ஹரிராயா ஐடில்பித்ரி கொண்டாட்டங்களை முன்னிட்டு, பெலாபோஹான் கிள்ளான் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுமார் 750 தகுதியுள்ள குடும்பங்களுக்குத் தலா 200 ரிங்கிட் மதிப்பிலான 'ஜோம் ஷோப்பிங்' வுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக மட்டும் அத்தொகுதிக்கு 150,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹூரி தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2013-ஆம் ஆண்டிற்கு முன்னதாக மாநில அரசின் இத்தகைய பெருநாள் உதவிகள் உணவுப் கூடைகளாக மட்டுமே வழங்கப்பட்டு வந்ததை நினைவு கூர்ந்தார்.

அந்த அணுகுமுறை மாற்றப்பட்டு, பயனாளிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் வகையில் 100 ரிங்கிட் வவுச்சர்களாக வழங்கப்பட்டது. தற்போது மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் மாநில அரசு அந்த வவுச்சரின் மதிப்பை 200 ரிங்கிட்டாக உயர்த்தி வழங்கியுள்ளது பெருமைக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாற்றத்தின் மூலம் அரசாங்கத்தின் உதவித் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை உறுதி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மாநில அரசின் இத்தகைய மக்கள் நல முயற்சிகள், ஒவ்வொரு குடும்பமும் இந்த ஆண்டு பெருநாளை மகிழ்ச்சியுடனும் அர்த்தமுள்ளதாகவும் கொண்டாட வழிவகுக்கும் என்று அஸ்மிசாம் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏழை எளிய மக்களின் நலனுக்கே சிலாங்கூர் அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்பதையும் அவர் தனது பதிவில் உறுதிப்படுத்தினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.