ஏப்ரல் மாத மின்சாரத் தள்ளுபடி குறைந்தது, AFA விகிதம் இப்போது 0.47 சென்/kWh

1 ஏப்ரல் 2026, 1:52 AM
ஏப்ரல் மாத மின்சாரத் தள்ளுபடி குறைந்தது, AFA விகிதம் இப்போது 0.47 சென்/kWh

கோலாலம்பூர்: மார்ச் 31, இம் மாத, ஏப்ரல் மாதத்திற்கான தானியங்கி எரிபொருள் செலவு சரி செய்தல் பொறிமுறை (AFA) விகிதத்தை தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) அறிவித்துள்ளது. இதன்படி, பயனர்கள் ஒவ்வொரு கிலோவாட் மணி நேரத்திற்கும் (kWj) 0.47 சென் என்ற சற்றே குறைந்த தள்ளுபடியைப் பெறுவார்கள்.

இருப்பினும், 600 kWj மற்றும் அதற்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் உள்நாட்டுப் பயனர்களுக்கு (சுமார் RM215.98 மதிப்பிலான மின் கட்டணம்) இந்த AFA விகிதம் பொருந்தாது என்று TNB அதன் 'X' சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சந்தை எரிபொருள் விலை மற்றும் அந்நியச் செலாவணி மாற்று விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணப் பட்டியலில் AFA விகிதம் காண்பிக்கப்படும் என்று TNB அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் மே (-0.39 சென்/kWj), ஜூன் (-0.91 சென்/kWj) மற்றும் ஜூலை (+0.08 சென்/kWj) மாதங்களுக்கான உத்தேச AFA விகிதங்களையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் மார்ச் 30, 2026 நிலவரப்படி புதுப்பிக்கப்பட்டுள்ளது."இந்த AFA விகித அறிவிப்பு, எரிசக்தி ஆணையத்தின் (ST) ஒப்புதல் அல்லது அமைச்சரின் அதிகாரப்பூர்வ முடிவின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது," என்று அது கூறியது.

மின்சாரக் கட்டணங்களைக் கணக்கிட முன்பு பயன்படுத்தப்பட்ட சமநிலையற்ற செலவுப் பகிர்வு (ICPT) பொறிமுறைக்குப் பதிலாக, எரிவாயு, நிலக்கரி போன்ற எரிபொருட்களின் சந்தை விலை மற்றும் அந்நியச் செலாவணி விகிதங்களின் அடிப்படையில் சரிசெய்யப் படும் ஒரு பொறிமுறையே AFA ஆகும்.

நேற்றிரவு 9.23 மணியளவில், பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 4.10 விழுக்காடு அதிகரித்து, 117.4 அமெரிக்க டாலராக இருந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.