கோலாலம்பூர், மார்ச் 31 - 2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள், கடந்த ஆண்டை விட சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தேசிய சராசரி தரநிலை (GPK) 2024-இல் 4.49-ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 4.42-ஆக உயர்ந்துள்ளது.
கல்வி தலைமை இயக்குநர், டத்தோ டாக்டர் முகமட் அஸாம் அகமட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இம்முடிவுகளின்படி, மொத்தமாக 366,435 மாணவர்கள், அதாவது 94.29 விழுக்காட்டினர் எஸ்.பி.எம் சான்றிதழ் பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 355,933 மாணவர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
"இது 10,502 மாணவர்கள் அல்லது 0.28 விழுக்காடு அதிகரிப்பாகும். எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளுக்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள்," என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கல்வி அமைச்சின் (KPM) தொடர்ச்சியான முயற்சிகளின் வெற்றிக்கு இந்த முடிவுகள் ஒரு சான்றாகும். மலேசியா மடாணி கொள்கைக்கு ஏற்ப அனைவருக்கும் தரமான மற்றும் சமமான கல்வியை வழங்குவதில் அமைச்சு வெற்றி கண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது என்று முகமட் அஸாம் குறிப்பிட்டார்.
"அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது 'சி' கிரேடு (Kepujian) பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2024-இல் 86,040-ஆக இருந்த நிலையில், 2025-இல் 92,347-ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி (lulus) பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 136,791-இல் இருந்து 141,728-ஆக அதிகரித்துள்ளது," என்றார்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி இடைவெளி 0.04 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. நகர்ப்புற மாணவர்களின் GPK 4.40 ஆகவும், கிராமப்புற மாணவர்களின் GPK 4.81 ஆகவும் பதிவாகியுள்ளது.
பாடம் வாரியான தேர்ச்சியைப் பொறுத்தவரை, 95 பாடங்களில் 63 பாடங்கள் சிறந்த தேர்ச்சியையும், 29 பாடங்கள் சரிவையும், மூன்று பாடங்கள் முந்தைய ஆண்டைப் போலவே நிலையான தேர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
ஏழு முக்கியப் பாடங்களில், மூன்று பாடங்கள் முன்னேற்றத்தையும் நான்கு சரிவையும் கண்டுள்ளன. இஸ்லாமியக் கல்விப் பாடம் 0.79 புள்ளிகள் அதிகரித்து மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதே சமயம், மலாய் மொழிப் பாடம் 0.13 புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவில், பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 12 விருப்பப் பாடங்களில் எட்டு பாடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் கல்வி பாடம் 1.64 GPMP புள்ளிகள் அதிகரித்து மிகச் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தொழிற்கல்வி (MPV) சார்ந்த 22 பாடங்களில் 16 பாடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. மேலும், மனிதம் மற்றும் கலைத்துறை சார்ந்த 12 விருப்பப் பாடங்களில் 11 பாடங்கள் சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதில், தொழில்முனைப்புக் கல்வி பாடம் 0.94 புள்ளிகள் அதிகரித்துச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள், சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன
31 மார்ச் 2026, 9:01 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்
Shalini Rajamogun
31 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் இலவச டியூசன் திட்டம் 200,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும்
Dewi Abdul Rahman
7 ஆகஸ்ட் 2026

national
நாளை தொடங்கும் எஸ்.பி.எம். மறுதேர்வை 12,974 பேர் எழுதவுள்ளனர்
Shalini Rajamogun
13 ஜூலை 2026

national
எஸ்.பி.எம் தேர்வில் 10A பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு
Shalini Rajamogun
9 ஏப்ரல் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



