ஷா ஆலம், 21 மார்ச்: சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ), SS14, USJ 1 மற்றும் பூச்சோங் பகுதியில் உள்ள பண்டார் புத்ரி சுற்றுவட்டாரங்களில், உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்ட பல சுகாதார மற்றும் அழகு நிலையங்களை (மசாஜ் மையங்கள்) 14 மார்ச் அன்று நடைபெற்ற அமலாக்க நடவடிக்கையின் போது மூடியுள்ளது.
MBSJ வெளியிட்ட தகவலின்படி, ஆய்வின் போது அந்த நிலையங்கள் உள்ளூராட்சி அதிகாரிகளிடமிருந்து செல்லுபடியாகும் அனுமதி பெறாமல் வணிகச் செயல் பாடுகளை மேற்கொண்டது கண்டறியப்பட்டது.
“சட்ட அமலாக்க நடவடிக்கையாக, சம்பந்தப் பட்ட நிலையங்களில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் அவை உடனடியாக மூடப் பட்டன,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், அனைத்து வணிக நிறுவனங்களும் சட்டங்களையும் விதிமுறைகளையும் கடைப் பிடிக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த, கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கை- கள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று MBSJ தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, உள்ளூர் மக்கள் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் முக்கியமானதாகும் என்று கூறப்பட்டது.
விதிமுறைகளை மீறும் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க விரும்பினால், MBSJ அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அல்லது சுபாங் ஜெயா கட்டுப்பாட்டு மையத்தை 03-80247700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








