கோலாலம்பூர், மார்ச் 20 – மலேசியாவின் சிலாங்கூர், பேராக் மற்றும் சரவாக் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணி வரை இடியுடன் கூடிய கனமழை என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சிலாங்கூர் மாநிலத்தில் சபாக் பெர்ணம் பகுதி மழையினால் பாதிக்கப்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பேராக் மாநிலத்தில் பாகான் டத்தோ மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய பகுதிகளில் மோசமான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், கிழக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் கூச்சிங், சமரஹான், ஸ்ரீ அமான் மற்றும் பெத்தோங் (புசா மற்றும் பெத்தோங் பகுதிகள்) ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், சரிகேய் (மெராடோங்), சிபு மற்றும் முக்கா (டாரோ, மாத்து மற்றும் டலாட்) ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய பண்டிகைக் காலத்தில் மக்கள் தங்களது பயணங்களைத் திட்டமிடும் போது இத்தகைய வானிலை மாற்றங்களைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.







