சிலாங்கூரில் இன்று மாலை வரை கனமழை

16 மார்ச் 2026, 7:36 AM
சிலாங்கூரில் இன்று மாலை வரை கனமழை

கோலாலம்பூர், மார்ச் 16 - இன்று மாலை 5 மணி வரை மலேசியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகள், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்கள் முழுவதிலும் கனமழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் இதே போன்ற வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் சில பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான தீவிரத்துடன் கனமழை பெய்யும் அறிகுறிகள் தென்படும்போதும், அந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் போதும் இத்தகைய இடி மின்னல் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இது ஒரு குறுகிய கால எச்சரிக்கை என்பதால், வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து அதிகபட்சம் ஆறு மணி நேரம் மட்டுமே இது செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையற்ற வானிலை காரணமாகப், பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

துல்லியமான மற்றும் உடனுக்குடனான தகவல்களைப் பெற மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.met.gov.my பக்கத்தை நாடவும், சமூக ஊடகங்களைப் பின்தொடரவும் அல்லது myCuaca செயலியைத் தங்கள் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.