ஐந்து மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

15 மார்ச் 2026, 8:23 AM
ஐந்து மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 15: இன்று மாலை 6 மணி வரை மலேசியாவில் ஐந்து மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பேராக் மாநிலத்தில் கிந்தா, காம்பார் மற்றும் பத்தாங் பாடாங் ஆகிய மாவட்டங்களிலும், பகாங் மாநிலத்தின் ரொம்பின் பகுதியிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற வானிலை எச்சரிக்கை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் பகுதிக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் மாநிலத்தில் தங்காக், செகாமட், மூவார், பத்து பஹாட், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.

கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக்கின் கூச்சிங், செரியான், சமரஹான், முக்கா (தாரோ மற்றும் மாத்து), கபிட் (சோங்), பிந்துலு (தாதாவ் மற்றும் செபாவ்), மிரி மற்றும் லிம்பாங் ஆகிய பகுதிகளில் மோசமான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.