சபாவில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது

12 மார்ச் 2026, 4:49 AM
சபாவில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது

கோத்த கினபாலு, மார்ச் 12 – சபா மாநிலத்தில் பைத்தான் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஆக அதிகரித்துள்ளது. இதில் 93 குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று வரை 82 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பைத்தான் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைக்க ஐந்து தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மலேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், சபாவின் உட்புறப் பகுதிகளில் இன்றைய நாள் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை நீடிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வெள்ள நீர் மேலும் உயர வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.