லஹாட் டத்துவில் முதலையிடம் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

30 ஜூன் 2026, 1:45 AM
லஹாட் டத்துவில் முதலையிடம் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

லஹாட் டத்து, ஜூன் 30: சபா, லஹாட் டத்து மாவட்டத்தின் கம்போங் தகுபி, பகுதியில் உள்ள ஆற்றில், 12 வயது சிறுவன் ஒருவன் முதலை தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

அச்சிறுவன் முதலையினால் கவ்வப்பட்டு ஆற்றின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவனின் உடலை அவனது குடும்பத்தினரும் பொதுமக்களும் மதியம் சுமார் 2 மணியளவில் ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.

அச்சிறுவன் முதலையினால் ஆற்றிற்குள் இழுத்துச் செல்லப்பட்டதை அவனது அண்டை வீட்டார் நேரில் கண்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுவனின் உடலைப் பரிசோதித்ததில், அவனது முதுகுப் பகுதி மற்றும் கால்களில் முதலையின் கொடூரமான கடி அடையாளங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைக்கு இச்சம்பவம் திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டு, மேல் விசாரணைகள் தொடர்ந்து முடுக்கி விடப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.