ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல இனிப்பான அறிவிப்புகள்; பிரதமர் அன்வார் அறிவிக்கவுள்ளார் 

10 மார்ச் 2026, 2:06 AM
ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல இனிப்பான அறிவிப்புகள்; பிரதமர் அன்வார் அறிவிக்கவுள்ளார் 

புத்ராஜெயா, மார்ச் 10- அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா  பெருநாளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேலும் பல நற்செய்திகளை விரைவில் வழங்கவுள்ளார்.

இத்தகவலை பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா உறுதிப் படுத்தினார்.ஏப்ரல் மாதம் வழங்கப் படவிருந்த STR  ரொக்க உதவியின் இரண்டாம் கட்டத்தை முன்கூட்டியே, அதாவது நாளையே வழங்குமாறு பிரதமர் நேற்று  காலை உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் மேலும் பல புதிய உதவித் திட்டங்களையும் அறிவிப்புகளையும் ஹரி ராயாவிற்குள் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஹரி ராயா கொண்டாட்டத்திற்கு முன்பாக, நிதி மற்றும் சமூக ரீதியாக மக்களுக்கு உதவுவதையே இந்த அறிவிப்புகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

மக்களின் நலன் மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் மடாணி அரசாங்கம் எப்போதும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்றும் துங்கு நஸ்ருல் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.