ஜோகூரில் விரைவுப் பேருந்து விபத்து: 10 பேர் காயம்

9 மார்ச் 2026, 7:00 AM
ஜோகூரில் விரைவுப் பேருந்து விபத்து: 10 பேர் காயம்

ஜோகூர், மார்ச் 9 — கம்போங் செபாகாட் பாரு, ஸ்கூடாயில் விரைவுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியிடப்பட்டது.

நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில், ஓட்டுநர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதில் இருவர் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்து குறித்து இரவு 8.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக ஜோகூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நடவடிக்கை பிரிவு தெரிவித்தது.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் உட்பட இடிபாடுகளில் சிக்கியிருந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.