கோல கிராய், மருத்துவமனையின் விடுதி குளியலறையில் 29 வயது பெண் பயிற்சி மருத்துவரின் சடலம்!

8 மார்ச் 2026, 6:47 AM
கோல கிராய், மருத்துவமனையின் விடுதி குளியலறையில்  29 வயது பெண் பயிற்சி மருத்துவரின் சடலம்!

கிளந்தான், கோல கிராய், சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனையின் விடுதியில் தங்கியிருந்த 29 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், நேற்று காலை குளியலறையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று காலை 9.55 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலிசார் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.

கோல கிராய் மாவட்ட போலிஸ் தலைவர் மஸ்லான் மாமாட் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தில் எந்தவித குற்றச் செயல்களுக்கான கூறுகளும் கண்டறியப் படவில்லை என்றார். எனவே, இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப் படுத்தப் பட்டுள்ளது.

இருப்பினும், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, அப்பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவரின் இந்த திடீர் மரணம், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சகப் பயிற்சியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.