கோலாலம்பூர், மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, நாட்டின் எல்லைகள் மற்றும் முக்கிய இடங்களில் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அரச மலேசிய போலீஸ் (PDRM) அனைத்து மாநில போலீஸ் தலைவர்கள் மற்றும் துறை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த பாதுகாப்புப் பணிகளில், நாட்டில் உள்ள அமெரிக்கா (AS) மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நலன்கள், சொத்துக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களும் அடங்கும் என தேசிய போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார். இவையாவும் குறிப்பிட்ட தரப்பினரின் இலக்காக மாறக்கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"இந்த நிலவரம் குறித்து ஆராய்வதற்காக, தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் (MKN) நாங்கள் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்று அவர் புக்கிட் அமானில் இன்று நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இந்தக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், தேவையற்ற வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதிலும் PDRM-இன் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக, அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்கள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
- பெர்னாமா
மத்திய கிழக்கு பதற்றத்தைத் தொடர்ந்து, போலீஸ் ரோந்துப் பணிகள் மற்றும் பாதுகாப்பு தீவிரம்
7 மார்ச் 2026, 5:21 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
35 ஆண்டுகால சேவைக்குப் பின்னர் ஓய்வு பெற்றார் அயோப் கான்
Bernama
26 ஜூலை 2026

selangor
பகடிவதை சம்பவங்களைத் தடுக்க பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - கிள்ளான் மாவட்டக் காவல்துறை
Shalini Rajamogun
15 ஜூலை 2026

national
கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் கூடுதல் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; சுற்றுலாத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
Shalini Rajamogun
10 ஜூன் 2026

national
புக்கிட் சாங்காட் ஆசாவில் மாயமான இளம் பெண் சடலமாக மீட்பு
Shalini Rajamogun
26 மே 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



