ஸ்ரீ அண்டலாஸ் ரமலான் பஜார் வர்த்தகர்களைத் தெற்கு கிள்ளான் காவல்துறைத் தலைவர் நேரில் சந்தித்தார்

5 மார்ச் 2026, 7:40 AM
ஸ்ரீ அண்டலாஸ் ரமலான் பஜார் வர்த்தகர்களைத் தெற்கு கிள்ளான் காவல்துறைத் தலைவர் நேரில் சந்தித்தார்
ஸ்ரீ அண்டலாஸ் ரமலான் பஜார் வர்த்தகர்களைத் தெற்கு கிள்ளான் காவல்துறைத் தலைவர் நேரில் சந்தித்தார்

ஷா ஆலம், மார்ச் 5 – தாமான் ஸ்ரீ அண்டலாஸ் ரமலான் பஜாரில் வணிகர்களை நேரில் சந்தித்து உரையாடும் வாக்அபவுட் (Walkabout) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காவல்துறைக்கும் உள்ளூர் சமூகத்திற்கும் இடையேயான உறவை கிள்ளான் தெற்கு மாவட்டக் காவல்துறை தலைவர் உதவி காவல் ஆணையர் லிம் ஜிட் ஹியூய் வலுப்படுத்தினார்.

தெற்கு கிள்ளான் மாவட்டத் துணை காவல்துறை தலைவர் கண்காணிப்பாளர் கமலாரிஃபின் அமன் ஷா, துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வாசு, உதவி கண்காணிப்பாளர் ஹனிதா முகமட் ஷாரீப் மற்றும் உதவி கண்காணிப்பாளர் நோரிசா யாக்கோப் உள்ளிட்ட பல மூத்த காவல்துறை அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும், கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (MBDK) உரிம இயக்குநர் முகமட் இஸ்ஸாத் மொக்தார் மற்றும் உதவி சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரி முகமட் ஷெரிஃபுடின் செதாபா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், பஜார் வர்த்தகர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், அவர்களின் கருத்துகளை அறிந்துகொள்ளவும், உள்ளூர் பாதுகாப்பு பிரச்சனைகளை அடையாளம் காணவும் காவல்துறைக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்வின் போது, வர்த்தகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்கவும், குற்றம் தொடர்பான எந்தவொரு தகவலையும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் நினைவூட்டப்பட்டனர்.

இந்த சமூக நட்பு அணுகுமுறை, குற்றத் தடுப்பு முயற்சிகளில் காவல்துறைக்கும் சமூகத்திற்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.