சுமத்ராவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது

3 மார்ச் 2026, 7:14 AM
சுமத்ராவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது

ஷா ஆலம், மார்ச் 3: இந்தோனேசியா, வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இன்று மதியம் 12.56 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் வடக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 2.0 டிகிரி வட அகலம் மற்றும் 96.5 டிகிரி கிழக்கு நீளவியல் இடத்தில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

“நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் இந்தோனேசியாவின் சிமியூலுவிலிருந்து தென்கிழக்கே சுமார் 112 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் இல்லை,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் தகவல் சேகரிப்புக்கு உதவுவதற்காக https://forms.gle/xbJD3PhHLATFYvzi9 என்ற இணைப்பின் மூலம் கேள்வித்தாளை நிரப்புமாறு மெட்மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.